பதிவு செய்த பத்திரம் தருவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் சார் பதிவாளர்!

9

காரைக்குடி: பதிவு செய்த பத்திரத்தை தராமல் இழுத்தடித்து, 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காரைக்குடி சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


காரைக்குடியில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்குடி கண்டனுார் ரோடை சேர்ந்த வைரவேல் என்பவர் பத்திரப்பதிவுக்காக வந்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்து பல நாட்கள் ஆகியும் பத்திரம் வழங்கப்படவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைரவேல் கேட்டபோது, 60,000 ரூபாய் கொடுத்தால் தான் பத்திரம் தர முடியும் என சார் பதிவாளர் முத்துப்பாண்டி, 36, தெரிவித்துள்ளார்.



இது சம்பந்தமாக வைரவேல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பத்திரப் பதிவு அலுவலகம் சென்ற வைரவேல், சார் பதிவாளர் முத்துப்பாண்டியிடம் பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், கண்ணன், எஸ்.ஐ., ராஜா முஹம்மது மற்றும் போலீசார், முத்துப்பாண்டி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பத்திர எழுத்தர் புவனப்பிரியாவை கைது செய்தனர்.

Advertisement