போர் விரைவில் முடிவுக்கு வரும்; நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெலென்ஸ்கி!

6

கீவ்: 'அமெரிக்கா அதிபர் பதவிக்கு டொனால்டு டிரம்ப் வருவதால், உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.



உக்ரைன், ரஷ்யா இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன், உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என சபதம் விடுத்தார். இந்த சூழலில் உக்ரைன் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி:


டொனால்ட் டிரம்ப அடுத்தாண்டு அமெரிக்கா அதிபராக பதவியேற்ற உடன் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வரும். இது நிச்சயம் நடக்கும். போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து சரியான தேதி எங்களுக்கு தெரியாது.



சமீபத்தில் டிரம்புடன் மொபைல் போனில் உரையாடியது ஆக்கபூர்வமாக இருந்தது. எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரான, எதையும் நான் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். போர் விரைவில் முடிவுக்கு வரும் என ஜெலன்ஸ்கி கூறியது சர்வதேச அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


ஆதரவு அளித்து வந்த, ஜோ பைடனின் ஜனநாயக கட்சி தோல்வியை தழுவியது. அமெரிக்காவின் ஆதரவு நிறுத்தப்படுமானால், அது உக்ரைனுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகும் என்பதால் ஜெலன்ஸ்கி அச்சத்தில் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement