இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இலக்கு: பிரதமர் மோடி திட்டவட்டம்
புதுடில்லி: 'இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே தனது அரசு நோக்கமாக கொண்டுள்ளது' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லி நடந்த தனியார் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக நாடுகளின் ஒவ்வொரு தேர்தலின் போது ஆட்சிகள் மாறுகின்றன. இந்திய மக்கள் 3வது முறையாக பா.ஜ., அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு முன்பு தேர்தல் வெற்றிக்காகவே அரசுகள் நடந்தன.
பா.ஜ., ஆட்சியில் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளோம். மக்களின் வளர்ச்சியே பா.ஜ., அரசின் தாரக மந்திரம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே தனது அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
பயங்கரவாதம்
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். 1.25 லட்சத்திற்கு அதிகமான ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் தேசத்தை பெருமைப்படுத்த ஆர்வமாக உள்ளனர்.
முந்தைய காலத்தில் பயங்கரவாதம் இந்திய மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது. இப்போது காலம் மாறிவிட்டது. பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். தனது அரசு ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.