சத்தீஸ்கரில் நக்சல்கள் 5 பேர் சுட்டுக்கொலை; படை வீரர்கள் இருவர் காயம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த தூப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலத்த காயமுற்றனர்.
சத்தீஸ்கரின் பஸ்தாரில் உள்ள நாராயண்பூர் எல்லையில் அமைந்துள்ள அபுஜ்மாத் காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. இது குறித்து சத்தீஸ்கர் மாநில போலீசார் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த பகுதிகளை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காட்டு பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலத்த காயமுற்றனர். அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.