எலி மருத்து நிறுவனத்தின் உரிமம் ரத்து; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மா.சு., உறுதி!

1

சென்னை: சென்னை குன்றத்தூரில் எலி விரட்ட வைக்கப்பட்ட மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்தை வைத்த பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆய்வறிக்கை வந்ததும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.


@1brசென்னை, குன்றத்துார் அருகே, மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன், 34. குன்றத்துாரில் ஒரு தனியார் வங்கி மேலாளர். இவரது வீட்டில், எலிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, எலி மருந்து அடிக்கும் தனியார் நிறுவனத்தை, ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து, நிறுவனம் சார்பாக ஒரு ஊழியர், கிரிதரன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் உட்புறம் அளவுக்கு அதிகமாக மருந்து அடித்து சென்றுள்ளார். இதனால் பாதிக்கபட்டு மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் ஆகியோர், சிகிச்சை பலனின்றி இறந்தனர். கிரிதரன் மற்றும் அவரது மனைவி பவித்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்தை வைத்த பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 2 நாட்களில் நிறுவனத்திற்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, ராமாபுரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: எலி மருந்து விவகாரத்தில் ஆய்வறிக்கை வந்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருந்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மருந்துகள் விற்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து கட்டுப்பாடுகள் குறித்து ஆராய்வற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement