காஞ்சி குமரகோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.21 லட்சம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள், நேர்த்தி கடனாக உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது.

அதன்படி, கோவில் செயல் அலுவலர் கேசவன், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் அலமேலு உள்ளிட்டோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, தன்னார்வலர்கள், பக்தர்கள் வாயிலாக உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று திறந்து எண்ணப்பட்டது.

இதில், 21 லட்சத்து 60,633 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 1,077 கிராம் வெள்ளியும் என, கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.

Advertisement