காப்பீடு திட்ட விழிப்புணர்வு கூட்டம்
செஞ்சி: செஞ்சி ஸ்டேட் பாங்க்கில் மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்படும் பிரதம மந்திரி வாழ்க்கை ஒளி காப்பீடு, பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீடு குறித்து வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மண்டல மேலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். உதவி பொது மேலாளர் ரேகா முன்னிலை வகித்தார். கிளை முதன்மை மேலாளர் மோகன் வரவேற்றார். சென்னை வட்டார துணை பொது மேலாளர் முகேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் பயன்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கினர். 2 மகளிர் குழுக்களுக்கு தொழில் துவங்க தலா 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
முன்னோடி வாடிக்கையாளர் செல்வமணி, மேலாளர் வடிவேல், துணை மேலாளர் பரிமளா மற்றும் வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். முதன்மை மேலாளர் பரிமளா நன்றி கூறினார்.