மின்வெட்டால் இருளில் மூழ்கிய வடாரண்யேஸ்வரர் கோவில்

திருவாலங்காடு, திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.

இக்கோவில் ஐந்து சபைகளில் முதல் சபையானரத்தினசபை என அழைக்கப்படுகிறது.

காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். இக்கோவிலுக்குதினமும் தமிழகம்மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துசெல்வர்.

இந்நிலையில் நேற்று மாலை, 5:30 மணியளவில் திருவாலங்காடில் மழைக்காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கோவில் அமைந்துள்ள சன்னிதி தெருவும் இருளில் மூழ்கியது.

இரவு, 7:00 மணி வரை மின்சாரம் இல்லாததால், கோவில் நுழைவு வாயில் மற்றும் வளாகம் கும்மிருட்டாக காட்சியளித்தது.

பிரசித்த பெற்ற கோவிலில் மின்சாரம் துண்டிக் கப்பட்டால் மாற்றுஏற்பாடாக ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர் வசதி கூட நிர்வாகம் ஏற்படுத்தாததால் அதிருப்தி அடைந்தனர்.

கோவில் நிர்வாகம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் தடையின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொடி மரத்தில் இருந்து உள்பிரகாரம் வரை இன்வெர்ட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவில் நுழை வாயில் மற்றும் வெளிப்பிரகாரத்தில் இன்வெர்ட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பணி ஓரிரு நாட்களில் முடிந்து விடும்' என்றார்.

Advertisement