பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு
உடுமலை : திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேலுள்ள பஞ்சலிங்கம் சுவாமி கோவில் மற்றும் அருவி உள்ளது.
இங்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில நாட்களாக திருமூர்த்திமலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லும் வழித்தடம் அடைக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கனமழை பெய்யும் நிலையில், கோவில் வளாகத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.