பேருந்துகள் மோதல் கண்ணாடி உடைந்தது

திருத்தணி,திருத்தணி முருகன் கோவிலில் நேற்று காத்திகை மாத முதல் கிருத்திகை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக, தணிகை இல்லத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு, கோவில் சார்பில், 2 பேருந்துகளும், தனியார் பேருந்துகள் 2 என 4 பேருந்துகள் இயக்கப்பட்டன.

மாலை 40க்கும் மேற்பட்ட பக்தர்களை தனியார் பேருந்து ஏற்றிக் கொண்டு மலைக்கோவில் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தின் பின்புறம்கோவில் பேருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏற்றிக் சென்றது.

தனியார் பேருந்து, மலைக்கோவில் வாகன நிறுத்தம் இடத்திற்கு சென்று திடீரென பிரேக் பிடிக்காததால், பேருந்து பின்னோக்கி வந்த போது, பின்னால் இருந்த கோவில் பேருந்தின் மீதுமோதியது.

இதில், கோவில் பேருந்து முன்பக்க கண்ணாடி உடைத்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் இல்லை. திருத்தணி போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Advertisement