திருத்தணியில் கூட்டு குடிநீர் திட்டப்பணி டிசம்பரில் முடியும் என அதிகாரிகள் உறுதி

திருத்தணி,

திருத்தணி நகராட்சி யில், குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்காக, 110 கோடி ரூபாயில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் துவங்கப்பட்டன.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், இந்திரா நகர் மற்றும் சேகர்வர்மா நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர்மேல்நிலைத் தொட்டி மற்றும் தரைமட்ட நீர்சேமிக்கும் தொட்டிகட்டியும், 21 வார்டுகளில், குடிநீர் குழாய் அமைத்தும்,வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.

கடந்த, 7 மாதங்களுக்கு முன் கூட்டுக் குடிநீர்திட்டத்தை முதல்வர்ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது சோதனைஓட்டம் நடந்து வருகிறது.

ஆனால், குடிநீர் குழாய்கள் அதிகளவில்சேதமடைந்து தண்ணீர் சாலை மற்றும் தெருக்களில் வீணாக போனது.

கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் முழுமையாக முடிக்காமல் மெத்தனம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இதில், நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, ஆணையர் பாலசுப்ர மணியம், பொறியாளர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரிய உதவி பொறியாளர்கள் பிரபாகரன், குமரவேல் மற்றும் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர்பெருமாள் ஆகியோர்பங்கேற்று பேசினர்.

அப்போது தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள்,தற்போது, 10 வார்டுகளில் சோதனை ஓட்டம் முடிந்து உள்ளன.

மீதமுள்ள, 11வார்டுகளில் சோதனை ஓட்டம், சேதம் அடைந்த குழாய்களை சீரமைத்து டிசம்பர் இறுதிக்குள் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடித்து நகராட்சியிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு பேசினர்.

Advertisement