அரசு மருத்துவம னையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
திருத்தணி, திருத்தணி அரசு மருத்துவமனையில் கடந்த,2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாக பணியில் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் வெங்கடேஷ், 37, தனியார்மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருத்துவத்துக்கு இணையாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்.
எலும்பு முறிவு, இடுப்பு, முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு அதிநவீன அறுவை சிகிச்சை செய்துவருகிறார்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மருத்துவர் வெங்கடேஷ், 44 பேருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை, 8 பேருக்கு, இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் 28 பேருக்குநுண்துளை மூங்கால் ஜவ்வு அறுவை சிகிச்சை என மொத்தம், 80 பேருக்கு அறுவை சிகிச்சை செய்தார். அனைவரும் நலமாக உள்ளனர்.
இது குறித்து எலும்பு முறிவு மருத்துவர் வெங்கடேஷ் கூறுகையில், 'திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன முறையில் இலவசமாக செய்யப்படுகிறது.
எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறலாம்.
ஒரு வருடத்தில், 80 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு, தலைமை மருத்துவர், சகமருத்துவர்கள், செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர்.
இவ்வாறு அவர்கூறினார்.