அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழா
கடலுார்: கடலுார் அருகே ஆலப்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர வீரமணி-ஜெயந்தி தம்பதியர் மகள் சுஷ்மிதாவுக்கும், சீர்காழி நல்லவிநாயகபுரம் கடக்கண் விநாயகநல்லுாரை சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் ரவி-கவிதா தம்பதியர் மகன் விஜய் திருமண வரவேற்பு விழா, கடலுார் சுப்ராயலு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மணமக்களை வாழ்த்தி வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார். விழாவில் மாவட்ட செயலாளர்கள் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., சொரத்துார் ராஜேந்திரன், பாண்டியன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சி.கே.சுப்ரமணியன், மாநில எம்.ஜி.ஆர்.,இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் மற்றும்
மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், பிரகாஷ், மாநில மருத்துவர் அணி சீனுவாசராஜா, சிதம்பரம் பல்கலைக்கழக முன்னாள் இணைவேந்தர் செயலர் ராஜேந்திரன், தொழிலதிபர் ரமேஷ்பிரபா, ஊராட்சி தலைவர் ரஞ்சித், பழனிசாமி, பகுதி செயலாளர் மாதவன், காங்., மாநகர தலைவர் வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் குமார் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
விழாவுக்கு வந்தவர்களை கலைச்செல்வன், சுபஸ்ரீ, கிருத்திகா ஜெயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.