சாதனையை சொல்லி பிரசாரம் எஸ்.ஆர்.எம்.யு., வியூகம்
கோவை: ''எங்களது சாதனைகளை கூறி தொழிலாளர்களிடம் ஓட்டுப்பெறுவோம்,'' என, எஸ்.ஆர்.எம்.யு., கோட்ட துணை செயலாளர் ஜோன் தெரிவித்தார்.
இந்திய ரயில்வேயில், அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்களுக்கான தேர்தல், டிச., 4 முதல் 6 வரை நடக்கிறது.
ரயில்வே ஊழியர்களிடம் ஆதரவை பெற தொழிற்சங்கங்கள் முயற்சித்து வருகின்றன.
எஸ்.ஆர்.எம்.யு., சேலம் கோட்ட துணை செயலாளர் ஜோன் கூறியதாவது:
எங்களது சங்கம் ஊழியர்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. 2004ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு மிகவும் குறைந்தளவு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை பெற்றுத்தந்தோம். குடும்ப ஓய்வூதியமும் பெற்றுத்தரப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு இரண்டு ஆண்டுகள் பெற்றுத்தரப்பட்டுள்ளது.
'டிராக் மேன்'களின் பணிப்பளுவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதை எதிர்த்து போராடி முறியடித்துள்ளோம். சாதனைகளை தொழிலாளர்களிடம் தெரிவித்து ஓட்டுப்பெற உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.