வெட்டிபெருமாளகரம் பள்ளி சிறந்த அரசு பள்ளியாக தேர்வு
கள்ளக்குறிச்சி: வெட்டிபெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, சிறந்தபள்ளியாக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வெட்டிபெருமாளகரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 2023 - 2024ம் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளியாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த விழாவில், பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் மகேஷ் பள்ளி தலைமை ஆசிரியை மலர்க்கொடியிடம் சுழற்கேடயத்தை, வழங்கினார்.
வட்டார கல்விஅலுவலர்கள் தனபால், ராஜசேகர் மற்றும் ஆசிரியைசிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement