இளைஞர்கள் தொழில் துவங்க கடன் பெறலாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலை இல்லாத இளைஞர்கள் தொழில் துவங்க வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெறலாம்.
இத்திட்டத்தில் வியாபாரத் தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம்.
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியம். அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயதிற்குள்ளும், சிறப்பு பிரிவினருக்கு 18 முதல் 55 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
www.msmeonline.tn.gov.in/uvegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் கடன் பெற்று தொழில் துவங்க விரும்புவோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொலைபேசி எண் 04567--290459, 89255 33983, 89255 33984 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.