சாலை விரிவாக்க பணிக்கு நெடுஞ்சாலைத்துறை அளவீடு

பல்லடம்: பல்லடம் அருகே, சாலை விரிவாக்க பணிக்காக, நெடுஞ்சாலைத் துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பல்லடத்தை அடுத்த, காளிவேலம்பட்டி பிரிவி லிருந்து சோமனுார் செல்லும் ரோடு, காளிவேலம்பட்டி, நடுவேலம்பாளையம், பூமலுார், 63 வேலம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக சோமனுார் மற்றும் மங்கலத்தை இணைக்கிறது.

கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசலில் இருந்து தப்பிக்க, வாகன ஓட்டிகளுக்கு இந்த ரோடு மாற்று வழித்தடமாக பயன்பட்டு வருகிறது.

மேலும், இப்பகுதிகளில் உள்ள விசைத்தறிக் கூடங்கள், விவசாய நிலங்கள், கறிக்கோழி பண்ணைகள், கல்குவாரி மற்றும் கிரசர் நிறுவனங்களை சார்ந்துள்ள வாகனங்களும் இவ்வழியாகத்தான் வந்து செல்கின்றன. இவ்வாறு எண்ணற்ற வாகனங்கள் வந்து செல்லும் இந்த ரோட்டில், 'மால்' ஒன்றும் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு மிகவும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டி களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, குறுகலாக உள்ள இந்த ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் சமீபத்தில் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கை மனுவை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை உடனடியாக களப்பணியில் இறங்கியுள்ளது. இந்த ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக உள்ள இடம்? ஆக்கிரமிப்புகள் மற்றும் தேவைப்படும் இடம் உள் ளிட்டவை குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டி, இந்த ரோட்டில் அளவீடு பணி துவங்கி உள்ளது.

அளவீடு பணியுடன் கிடப்பில் போடாமல், காளிவேலம்பட்டி ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement