வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

திருப்பூர்: காங்கயம், பாப்பினியில் நடைபெற்று வரும் முன் காப்போம் மருத்துவ முகாமில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.

மருத்துவப் பணிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து பகுதிகளிலும், பகுதிவாரியாக வரும் முன் காப்போம் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

அவ்வகையில், காங்கயம் அடுத்த பாப்பினி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நேற்று இம்முகாம் நடைபெற்றது. முகாமை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார், வட்டார மருத்துவர் விஜய குமார், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.

இதில், 5 பேருக்கு மருந்துப் பெட்டகம், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப் பெட்டகம், 4 மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி ஆகியன வழங்கப்பட்டது.

Advertisement