கலைத் திருவிழா போட்டி; அம்மாபாளையம் பள்ளி அபாரம்

திருப்பூர்: தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' கருத்தின் அடிப்படையில் கலைத் திருவிழாவை நடத்தி வருகிறது.

அதன்படி, குறு மைய மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அனைத்து பகுதியிலும் நடந்தது. இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான போட்டிகளில் வெற்றி பெற்றோர் விவரம்:

ஓவியம்: அல்லாளபுரம் பள்ளி மாணவி லக்ஷிதாஸ்ரீ முதலிடம். தாராபுரம், நஞ்சியம்பாளையம் பள்ளி அபினேஷ் இரண்டாம் இடம். வெள்ளியங்காடு பள்ளி ஹாசினி மூன்றாம் இடம்.

களிமண் சுதை வேலைப்பாடு: பல்லடம், மாக்காபுரம் பள்ளி நிஷாந்த் - முதலிடம், பொங்கலுார் கேத்தனுார் பள்ளி சுபிட்சன் - இரண்டாம் இடம். மண்ணரை பள்ளி யோகிதா மூன்றாமிடம்.

மணல் சிற்பம் போட்டி: நல்லுார் பள்ளி ரித்தீஷ் குமார் - முதலிடம். திருநீலகண்டபுரம் பள்ளி ஸ்ரீநாத் - இரண்டாமிடம். தாராபுரம், பெரியபுதுார் பள்ளி தியாகேஷ் - மூன்றாமிடம்.

செவ்வியல் இசை: அம்மாபாளையம் பள்ளி மாணவி ஸ்வேதா - முதலிடம். வேலம்பாளையம் பள்ளி ஷான்துல்கர் - இரண்டாமிடம்.ஜெய்வாபாய் பள்ளி அபிநந்தனா - மூன்றாமிடம்.

நாட்டுப்புறப் பாடல்: ஜெய்வாபாய் பள்ளி அனுகீர்த்தனா - முதலிடம். சிறுபூலுவப்பட்டி பள்ளி ஸ்வேதா - இரண்டாம் இடம், முதலிபாளையம்பள்ளி தீபிகா - மூன்றாமிடம்.

வில்லுப்பாட்டு: அம்மாபாளையம் அரசு பள்ளி இசைக்குயில் குழு - முதலிடம். திருப்பூர், சமத்துவபுரம் பள்ளி கலைமகள் வில்லிசை குழு -இரண்டாமிடம். பல்லடம், மாதேஸ்வரன் நகர் பள்ளி தெம்மாங்கு குழுவினர் மூன்றாமிடம்.

கிராமிய நடனம்: சிறுபூலுவப்பட்டி பள்ளி மயில் தோகை குழு - முதலிடம். அம்மாபாளையம் பள்ளி கிராமத்து மின்னல்கள் குழு - இரண்டாமிடம். அரண்மனைபுதுார் பள்ளி விஜயா கலை குழு - மூன்றாமிடம்.

பரதநாட்டியம்: அம்மாபாளையம் பள்ளி, முருகன் கவுத்துவம் குழு - முதலிடம். சிறுபூலுவப்பட்டி பள்ளி சிறகுகள் குழு- இரண்டாமிடம். பெருந்தொழுவு பள்ளி விஸ்வ ஜோதி குழு - மூன்றாமிடம்.

தனிநபர் நடிப்பு: மூலனுார், என்.ஜி.சி., வலசு பள்ளி சுஹாசினி - முதலிடம். அம்மாபாளையம் பள்ளி சம்வர்த்திகா - இரண்டாமிடம். ஜெய்வாபாய் பள்ளி மோகிதா - மூன்றாமிடம்.

நகைச்சுவை போட்டி: குடிமங்கலம், கோட்டமங்கலம் பள்ளி மதிவதனா முதலிடம்; உடுமலை, அந்தியூர் பள்ளி சுமன் இரண்டாமிடம். முத்துார் பள்ளி ஷவீன் மூன்றாமிடம்.

பலகுரல் போட்டி: வீரணம்பாளையம் பள்ளி ஷாம் கண்ணன் முதலிடம். மாதேஸ்வரன் நகர் பள்ளி நித்திஷ் இரண்டாமிடம். குடிமங்கலம் சோமவாரப்பட்டி பள்ளி விஷ்ணுவர்தன் மூன்றாமிடம்.

மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி செவ்வியல் இசை (தனிப்பாட்டு), வில்லுப்பாட்டு, பரதம் ஆகிய மூன்று போட்டியில் முதலிடம் பெற்று, அந்த மூன்று போட்டிகளிலும் மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement