கூலி உயர்வில் உடன்பாடு 'பவர்டேபிள்' சங்கம் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் 'சைமா' மற்றும் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் இடையே, கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தில் இருந்து, நடைமுறை கூலியில் இருந்து, 7 சதவீத உயர்வு வழங்கப்பட வேண்டும்.

இந்நிலையில், 250க்கும் அதிகமான யூனிட்டுகளுக்கு 'ஜாப்ஒர்க்' ஆர்டர் கொடுக்கும் நிறுவனம், கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி, 18ம் தேதி (நாளை) முதல் வேலை நிறுத்தம் செய்யப்படுமென, பவர்டேபிள் சங்கம் அறிவித்தது.நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட நிறுவனம், கூலி உயர்வு வழங்க ஒப்புக்கொண்டது. அதன்படி, வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டது.

பவர்டேபிள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், ''ஏற்கனவே உள்ள கூலி உயர்வு ஒப்பந்தப்படி, ஆண்டுக்கு 7 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். சில நிறுவனங்கள் மட்டும் கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தன; பேச்சுவார்த்தை மூலம், சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது; உற்பத்தி நிறுத்த போராட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது; அனைத்து யூனிட்டுகளும் வழக்கம் போல் இயங்கும்,'' என்றார்.

Advertisement