. 'கலைஞர் கனவு இல்லம்' திட்ட பயனாளிகள் முதல் தவணை தொகை வழங்க கோரிக்கை

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு, இதுவரை முதல் தவணை தொகை கூட வரவில்லை. அதனை விரைவாக வழங்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டத்தில், சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் திட்டமான, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம் துவக்கப்-பட்டது. இந்த திட்டத்தில், மாவட்டம் முழுவதும், 5,800க்கும் மேற்பட்டோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு, 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அதற்கான ஆணை‍ வழங்கப்பட்டது. இதையடுத்து, பயனாளிகள் ஏராளமானோர்,


கடந்த ஆவணியில் வீடு கட்ட பூஜை செய்து பணிகளை துவக்-கினர். இதில், 'பேஸ்' எனப்படும் முதல் கட்ட பணியை முடித்தால், 40 மூட்டை சிமென்ட் மற்றும் 75,000 ரூபாய் பயனா-ளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்-கப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்டம் முழுவதும், 'பேஸ்' பணியை முடித்துள்ள பயனாளிகளுக்கு, 40 மூட்டை சிமென்ட் மட்டும் வழங்கப்பட்டது. ஆனால், முதல் தவணை ‍தொகையான, 75,000 ரூபாயை இதுவரை வழங்கவில்லை.
இதுகுறித்து, பயனாளிகள் கூறியதாவது:
நாமக்கல், சேந்தமங்கலம், ப.வேலுார் உள்ளிட்ட யூனியன்-களில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்ட பயனாளிகளுக்கு முதல் தவணை சிமென்ட் மட்டும் வழங்கியுள்ளனர். 'பேஸ்' பணி முடிந்தால் வங்கி கணக்கில், 75,000 ரூபாய் வரவு வைக்கப்படும் என, தெரிவித்தனர். ஆனால், இதுவரை வங்கி கணக்கில் பணம் வரவில்லை. பணம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்-குனர் வடிவேல் கூறுகையில், ''கலைஞர் கனவு இல்லம் திட்-டத்தில், மாவட்ட முழுவதும், 5,800 பயனாளிகள் உள்ளனர். முதல் தவணை தொகை, 1,500 பேருக்கு தீபாவளி பண்டிகைக்கு முன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மீதமுள்ள பயனாளிக-ளுக்கு, இரண்டொரு நாளில் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்-தப்படும்,'' என்றார்.

Advertisement