ஐயப்ப சீசன் துவக்கம்: வேட்டி உற்பத்தி தீவிரம்


பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணி, லுங்கி, வேட்டி, சேலைகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது, சபரிமலை சீசன் துவங்கி உள்ளதால், காவி, புளூ, கருப்பு வேட்டி விற்பனை அதிகரித்து காணப்படும்.


இதனால் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இதுகுறித்து, நேருநகர் பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமை-யாளர் சரவணன் கூறியதாவது: சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்க-ளுக்கு தேவையான காவி, புளூ, கருப்பு வேட்டி தயாரிப்பு, கடந்த, 10 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு மாதத்-துக்கு மேல் இந்த வேட்டி தயாரிப்பு பணி நடக்கும். இங்கு தயா-ரிக்கும் வேட்டிகளை, மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, விற்பனைக்கு அனுப்புவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement