வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க., - மா.செ., அறிவுரை
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., வெளியிட்ட அறிக்கை: தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்-டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய, நாமக்கல் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி தோறும் சிறப்பு முகாம் நடக்கிறது.
நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டசபை தொகுதி-களில், இரண்டு நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், புதிதாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தந்த பகுதியை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள், பூத் ஏஜென்ட்கள் ஆகியோர் தங்களை முழுமையாக வாக்காளர் பட்-டியல் சிறப்பு திருத்தப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கிளை, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், பிஎல்-2 ஏஜென்ட்கள், தங்களுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், காலை, 9:00, மாலை, 5:00 மணி வரை கட்டாயம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.