மாடு முட்டி முதியவர் பலி

போடி: போடி அருகே சுந்தரராஜபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மகாலிங்கம் 84.

இவர் பால் மாடு வளர்த்து வந்துள்ளார். 7 நாட்களுக்கு முன்பு கொட்டகையில் இருந்த பால் மாட்டில் பால் கறக்க சென்றுள்ளார். அப்போது மாட்டின் கொம்பு மகாலிங்கத்தின் நெற்றியில் பலமாக முட்டியது. காயம் அடைந்த மகாலிங்கத்திற்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுஉள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement