40 பவுன் நகை கொள்ளையில் மூவர் சிக்கினர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சிதம்பரம் 60. கட்டட ஒப்பந்ததாரர். சொந்த ஊரான கண்டரமாணிக்கத்தில் இவருக்கு பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டில் நவ.1ல் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பின்புறக் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று லாக்கரில் இருந்த வைரம் பதித்த 40 பவுன் தங்க நகைகள் 50 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர்.

சிதம்பரம் திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், எஸ்.ஐ., சக்திவேல் தலைமையில் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையில் தொடர்புடைய 3 பேர் திருச்சி அருகே சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement