சிறு தொழில்களுக்கு உத்யம் பதிவு அவசியம்; கலெக்டர்
கரூர்: சிறு தொழில்களுக்கு உத்யம் பதிவு அவசியம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கான கணக்கெடுப்பு பணி, பதி-வுகள் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் குறு, சிறு மற்றும் நடுத்தர, உற்பத்தி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், உத்யம் பதிவு சான்றிதழை மாவட்ட தொழில் மையம் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நிறுவனங்களுக்கு வேண்டிய, அரசு துறை நிறுவனங்களின் அனுமதி, குறைந்த வட்-டியில் வங்கி கடன் வசதி, உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்-படும் மானியங்களை எளிதாக பெறுவதற்கு வழிவகை செய்யப்-பட்டுள்ளது.
உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்த, ஏற்று-மதி செய்வதற்கு வேண்டிய வசதி, இந்த சான்றிதழ் மூலம் எளி-தாக பெறலாம். இது தொடர்பாக, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 69/10, சத்யமூர்த்தி நகர், தான்தோன்றிமலை, கரூர் -639 007 அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.