மாவட்டத்தில், 1,055 ஓட்டுச்சாவடியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம்

கரூர்: கரூர் மாவட்டத்தில், 1,055 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம் நடந்து வருகிறது.


கடந்த அக்.,29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்-டது. தொடர்ந்து, வாக்காளர்பட்டியல் திருத்த பணிகள் நடக்கிறது. 2025 ஜன., 1ல் தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிறைவடைந்த நபர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம். இதற்கான படிவத்தை தாலுகா அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவ-ணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.


மேலும், தேசிய வாக்காளர் சேவை இணையதளமான, https://voters.eci.gov.in/ அல்லது Voters helpline என்ற மொபைல் செயலியின் மூலமாகவும் வாக்காளர் பட்-டியலில் பெயர் சேர்க்கலாம்.
கரூர் மாவட்டத்தில், 1,055 ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இங்கு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டையில் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
தொடர்ந்து, கரூர் அருகில் கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆண்டாங்கோவில் கிழக்கு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமை, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார். இன்றும் சிறப்பு முகாம் நடக்கிறது.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்-பேட்டை, நந்தன்கோட்டை, கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்-கொண்டம், பஞ்சப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் முகாம் நடந்தது.
இதில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், விண்ணப்பம் பெறுதல் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டி-யலில் இருந்து நீக்குதல், வாக்காளர்கள் முகாவரி மாற்றம் செய்தல், ஆகிய பணிகள் சிறப்பு முகாமில் நடந்தது. ஓட்டுச்சா-வடி மைய பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement