பெண் ஊழியருக்கு அடி தம்பதியர் மீது வழக்கு

கரூர்: கரூர் அருகே, தனியார் வங்கி பெண் ஊழியரிடம் கூடுதல் வட்டி கேட்டு அடித்ததாக, கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கரூர் மாவட்டம், வெள்ளியணை வள்ளியம் புதுார் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மனைவி சரஸ்வதி, 45; தனியார் வங்கி ஊழியர். இவர், புலியூர், கவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த மணி, 41, என்பவரிடம் கடந்த ஆறு மாதங்க-ளுக்கு முன்பு, 10 ஆயிரம் ரூபாயை வட்டிக்கு கடனாக பெற்-றுள்ளார்.


பிறகு வட்டியுடன் சேர்த்து, 13 ஆயிரத்து, 700 ரூபாயை சரஸ்-வதி, மணியிடம் கொடுத்து விட்டார். ஆனால் மணி கூடுதலாக, 1,500 ரூபாய் வட்டி கேட்டு, மனைவி மரியாயி, 40, என்பவருடன் சேர்ந்து கடந்த, 14ல் சரஸ்வதியை அடித்து, மிரட்டல் விடுத்-துள்ளார்.
இகுறித்து சரஸ்வதி அளித்த புகார்படி, மணி, அவரது மனைவி மரியாயி ஆகியோர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்ப-திவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement