வாகனத்தை வழி மறித்து ரூ.1.97 லட்சம் கொள்ளை
குளித்தலை: கரூர், வாஞ்சிநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்-திரன், 62. இவர் சிகரெட் கம்பெனியில், காசாளராக வேலை பார்த்தார். தற்போது, இரண்டு ஆண்டுகளாக வசூல் பணியில் ஈடு-பட்டு வருகிறார். கடந்த, 13 மாலை, 5:30 மணியளவில் மகேந்-திரா சரக்கு வாகனத்தில், சிகரெட் பண்டல்களை ஏற்றிக்கொண்டு திருமானுாரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஓட்ட, ரவிச்சந்திரனும் சென்றார்.
காந்திகிராமம், புலியூர், மாயனுார், கிருஷ்ணாபுரம், லாலா-பேட்டை, பஞ்சப்பட்டி உள்ளிட்ட ஏரியாக்களில் உள்ள கடை-களில், சிகரெட் பண்டல்களை வினியோகம் செய்துவிட்டு, பூலாம்பட்டி பிரிவு ரோட்டின் அருகே சென்றனர். அப்போது. பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இரண்டு வாலிபர்கள், வாகனத்தை மறித்து கையில் வைத்திருந்த இரும்பு ராடுகளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின், கலெக் ஷன் செய்த, ஒரு லட்சத்து, 97 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு, பைக்கில் தப்பி சென்றனர்.
இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்-றனர்.