கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கரூர்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க, மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் அழகிரி சாமி தலை-மையில், கரூரில் நேற்று நடந்தது.
அதில், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களை பிரிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து பதவி உதவி பெறாத, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, துணை தாசில்தார் நிலையில், பதவி உயர்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மோகனரங்கன், மாவட்ட தலைவர் நாகமணிகண்டன், செயலாளர் ரவி, பொரு-ளாளர் செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement