பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையை தடுக்க பணியிடங்களில் குழு அமைக்க கலெக்டர் உத்தரவு
ராசிபுரம்: பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையை தடுக்க, பணியி-டத்தில் குழு அமைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் உமா, உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் நிறு-வனங்களில், 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணியிடங்களிலும், பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2013-ன் கீழ் உள்ளக குழு அமைக்க வேண்டும். எனவே அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், கூட்டுறவு துறை சார்ந்த சங்கம், நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்-துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், விடுதிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், துணிக்க-டைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், பயிற்சி நிறுவ-னங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில், 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இடங்களில், 5 நபர் கொண்ட உள்ளக குழு மற்றும் புகார் பெட்டியும் அமைக்க வேண்டும்.
அந்த குழுவில், 50 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும். உள்ளக குழு அமைக்காத அரசு, தனியார் அலுவலகங்கள், நிறுவ-னங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 50,000 ரூபாய் அபராதம் விதிக்-கப்படும். மேலும், குழு அமைக்கப்பட்ட உடன் உறுப்பினர்களின் விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் dhewnamakkal2023@gmail.com (mailto:dhewnamakkal2023@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் நவ., 30க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகம், முதல் தளம், அறை எண், 233, 234 கூடுதல் கட்டடம், நாமக்கல் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.