டயர் ரீட்ரெட்டிங் சங்க ஆலோசனை கூட்டம்

நாமக்கல்: தாலுகா டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கோரிக்கை குறித்து விளக்கினார்.



கூட்டத்தில், நழிவடைந்து வரும் ரிட்ரெட்டிங் தொழிலை காக்க மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மூல பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்-பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத்தலைவர்கள் தர்மலிங்கம், லோகேந்திரன், இணை செய-லாளர்கள் ஹரி, வெங்கடேஷ், பொருளாளர் மல்லீஸ்வரன், நிர்வா-கிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement