தொழிலாளியை தாக்கிய பைனான்சியர் கைது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ், 36; விசைத்தறி தொழிலாளி. மா.கம்யூ., கட்சியின் கிளை செயலாளராக உள்ளார். குட்டைமுக்கு பகுதியில் உள்ள நிதி நிறு-வனத்தில், 6,000 ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.



வாங்கிய கடனை வாரந்தோறும் செலுத்திய நிலையில், ஓரிரு வாரங்கள் தவணை தொகையை செலுத்தவில்லை. இதனால், பைனான்சியர் கார்த்தி, 28, தர்மராஜிடம் பணம் கட்டாதது குறித்து கேட்டு தாக்கியுள்ளார். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசில், தர்மராஜ் புகாரளித்தார்.
ஆனால், போலீசார் வழக்குப்பதியவில்லை எனக்கூறி, நேற்று முன்தினம் இரவு, ஆவாரங்காடு பகுதியில் மா.கம்யூ., கட்சி சார்பில், பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, வழக்குப்பதிந்த பள்ளிப்-பாளையம் போலீசார், பைனான்சியர் கார்த்திக்கை கைது செய்-தனர்.

Advertisement