ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் சேலத்தில் ஆதரவு திரட்டும் சங்கத்தினர்

சேலம்: ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலுக்கு, சேலத்தில் சில சங்-கத்தினர், தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.


இந்திய ரயில்வேயில், தொழிற்சங்க அங்கீகார தேர்தல், டிச., 4, 5, 6ல் நடக்க உள்ளது. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்தில், எஸ்.ஆர்.எம்.யு., எனும் தெற்கு ரயில்வே மஸ்துார் யுனியன், டி.ஆர்.இ.யு., எனும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ்., எனும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம், டி.ஆர்.கே.எஸ்., எனும் தக் ஷண ரயில்வே கார்மிக் சங்கம், ஆர்.எம்.யு., ஆகிய சங்கங்கள் போட்டியிடுகின்றன.


குறிப்பாக தெற்கு ரயில்வேயில், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய கோட்டங்களில், 72,000க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள்
ஓட்டளிப்பர்.


சேலம் கோட்டத்தில், 8,583 பேர் ஓட்டுப்போட, 14 பூத்துகள் அமைக்கப்படும். அதன்படி ஈரோடு, 4, சேலம், 3, மொரப்பூர், சின்னசேலம், திருப்பூர், கோவை, கரூர், குன்னுார், போத்தனுார் ஆகிய இடங்களில் தலா, 1 பூத் அமைக்கப்படும்.


இங்கு தேர்தல் நடக்கும் நாளில் ரயில் ஓட்டுனர்கள், மின் பராம-ரிப்பு ஊழியர்கள், டிக்கெட் வழங்குபவர்கள், அலுவலக ஊழி-யர்கள் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் ஓட்டுப்போ-டுவர். 30 சதவீத ஓட்டுகளை பெறும் சங்கம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். பின் அச்சங்கம், தொழிலாளர்களின் குறை-களை, ரயில்வே நிர்வாகம், அரசிடம் பேச்சு நடத்தும் உரிமையை பெறும்.
குறிப்பாக சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்-களில், அனைத்து சங்கத்தினரும் ஆதரவு திரட்டி வருகின்றனர். ரயில்வே அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளிலும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.


இதுகுறித்து சங்கத்தினர் கூறியதாவது:
எஸ்.ஆர்.எம்.யு., சேலம் கோட்ட செயலர் கோவிந்தன்: யுனியன் சார்பில் கடந்த காலத்தில் போராட்டம் நடத்தி போனஸ், பதவி உயர்வு பெற்று கொடுக்கப்பட்டது. 6வது சம்பள கமிஷனில், 40 சதவீத சம்பள உயர்வு பெற்று கொடுத்தது.ரயில்வே ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது உள்ளிட்-டவை செய்து கொடுத்துள்ளோம். இனி ரயில்வே துறை தனியார்-மயமாவதை தடுப்பதற்கும், தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்-களை பாதுகாக்கவும், ஓட்டளிக்கும்படி பிரசாரம் செய்து வரு-கிறோம்.


டி.ஆர்.இ.யு., தொழிற்சங்க தெற்கு ரயில்வே மண்டல செயல் தலைவர் ஜானகிராமன்: புது ஓய்வூதிய திட்டத்தை ஆதரித்து துரோகம் செய்ததோடு, ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை இரு சங்கங்களும் ஆதரித்து தொழிலாளர்களுக்கு துரோகம் செய்-துள்ளன. ரயில்வே துறையில் தனியார்மயத்தை தடுத்து, தொழி-லாளர் சலுகைகள், உரிமைகளை பாதுகாக்கவும், பழைய ஓய்வூ-திய திட்டத்தை கொண்டு வரவும், 8வது ஊதியக்குழு அமைக்-கவும், எங்கள் சங்கத்துக்கு ஆதரவாக, நட்சத்திர சின்னத்தில் ஓட்-டுப்போட பிரசாரம் செய்து வருகிறோம்.
எஸ்.ஆர்.இ.எஸ்., தென் பகுதி ரயில்வே நிர்வாக பொதுச்செயலர் கோபாலகிருஷ்ணன்: குறைந்தபட்ச ஊதியத்தை, 32,500 ரூபாயாக உயர்த்தவும், பெற்றோர், பிள்ளைகளுக்கு எந்த கட்டுப்பாடின்றி மருத்துவ வசதிகளை அனுமதிக்கவும், எந்த நிபந்தனையின்றி பெற்றோர்களுக்கு பாஸ் சிறப்புரிமை வழங்கவும்; 3 ஆண்டு சேவையை முடித்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு, 3 பாஸ்கள் வழங்க விதியை திருத்தவும்; காகித பாஸை மீண்டும் கொண்டு வரவும் எங்களுக்கு ஓட்டுப்போட ரயில்வே ஊழியர்களிடம் கேட்டு வருகிறோம்.
டி.ஆர்.கே.எஸ்., தெற்கு ரயில்வே மண்டல பொதுச்செயலர் ராஜேஷ் முருகன்: போனஸ் உயர்த்தப்படவில்லை. எல்லா துறைக-ளிலும் ஆட்குறைப்பு.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். ரயில்வேயில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பி தொழிலாளர்-களின் வேலைப்பளு குறைக்கப்படும். டிக்கெட் பரிசோதகருக்கு பாதுகாப்பு, பெண் ஊழியர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட கோரிக்-கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement