ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


கர்நாடகா நீர்பிடிப்பு மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிக-ளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்-ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 6,500 கன அடியாக இருந்த நீர்-வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 10,000 கன அடியாக அதிக-ரித்தது.


இதனால், ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவி-களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று, விடுமுறை தினம் என்பதால், ஒகேனக்கல் வந்த ஏராளமான சுற்றுலா பய-ணிகள், அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்து மகிழ்ந்-தனர்.

Advertisement