மொடச்சூர் வாரச்சந்தையில் பருப்பு, பயிர் வியாபாரம் 'டல்'
கோபி: கோபி அருகே மொடச்சூர் வாரச்சந்தையில், பருப்பு, பயிர் ரகங்-களின் வியாபாரம் மந்தமாக இருந்தது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே மொடச்சூரில், பருப்பு, பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ) 170 ரூபாய், குண்டு உளுந்து, 140, பச்சை பயிர், 120, பாசிப்பருப்பு, தட்டை பயிர் தலா, 130, கடலைப்பருப்பு, கடுகு தலா, 120, சீரகம், 400, மல்லி, 120, வெந்தயம், 100, பொட்-டுக்கடலை, 120, வரமிளகாய், 200, பூண்டு, 350, மிளகு, 800, கருப்பு சுண்டல், கொள்ளு தலா, 100, வெள்ளை சுண்டல், 120, புளி, 120 ரூபாய்க்கு விற்பனையானது.
ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கியதால், மாலை அணிந்த பக்-தர்கள், கோவில் சார்ந்த செலவுக்காக ஆர்வம் காட்டுவர். அதேச-மயம் கார்த்திகை, மார்கழி மாதத்தில் பெரிய அளவில் பண்டிகை ஏதுமில்லை. எனவே தை மாதம் பிறந்தால், கோவில் பண்டிகை, சுபகாரியங்கள் நிகழ்வுக்காக, பருப்பு, பயிர் வியாபாரம் நன்றாக இருக்கும். தற்போது வியாபாரம் மந்தமாக இருப்பதாக, வியாபா-ரிகள் தெரிவித்தனர்.