குட்டையாக மாறிப்போன நாகாவதி அணை ஏமாற்றிய மழையால் விவசாயிகள் கவலை

தர்மபுரி: நாகாவதி அணைக்கு நீர்வரத்தின்றி, குட்டைபோல் மாறியுள்ளது. பருவமழை, 2வது ஆண்டாக ஏமாற்றியதால், அணையை நம்பியி-ருந்த பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட அர-காசனஹள்ளி பஞ்.,ல் உள்ள நாகாவதி அணை, 24 அடி உயரம் கொண்டது. அணையின் இடதுபுற கால்வாய், 10 கி.மீ., வலதுபுற கால்வாய், 18 கி.மீ., நீளம் கொண்டது. இதன் மூலம், அரகாசன-ஹள்ளி, சின்னம்பள்ளி, பெரும்பாலை உள்ளிட்ட பகுதியிலுள்ள, 1,993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


கடந்த, 2022 ல் அணை முழுகொள்ளவை எட்டியது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில், பருவமழை ஏமாற்றியது. தற்போது பெய்யும் மழையின் அளவும் போதுமான அளவிற்கு இல்லாததால், அணைக்கு நீர்வரத்தின்றி குட்டையாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில், நாகாவதி அணை நீர்-மட்டம், 7.52 அடியாக உள்ளது.
இனியும் அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்பில்லை என்பதால், கடந்த ஆண்டைபோல், நடப்பாண்டிலும் விவசாயிகள் மானா-வாரி விவசாயத்திற்கு மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு நாகாவதி அணையை நம்பியிருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement