வ.உ.சி., மார்க்கெட்டில் வரத்து சரிவு மல்லிகை பூ கிலோ ரூ.2,000க்கு விற்பனை

சேலம்:மார்க்கெட்டுக்கு வரத்து சரிவால் மல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ, 2,000 ரூபாய்க்கு விற்பனையானது.


சேலம், சின்ன கடைவீதி, வ.உ.சி., மார்க்கெட்டுக்கு, மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகள், பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. அங்கு கடந்த, 9ல் கிலோ, 600 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ படிப்படியாக உயர்ந்து, நேற்று கிலோ, 2,000 ரூபாய்க்கு விற்பனையானது.


அதேபோல், 240க்கு விற்ற முல்லை, 800; 260க்கு விற்ற ஜாதி-மல்லி, 480; 280க்கு விற்ற காக்கட்டான், 550; 200க்கு விற்ற கலர் காக்கட்டான், 450; 280க்கு விற்ற மலை காக்கட்டான், 550 ரூபாய்க்கு விற்பனையானது. 20க்கு விற்ற சம்பங்கி, 120; 50க்கு விற்ற சாதா சம்பங்கி, 200; 70க்கு விற்ற அரளி, வெள்ளை அரளி தலா, 140; 160க்கு விற்ற மஞ்சள் அரளி, செவ்வரளி தலா, 300; 100க்கு விற்ற ஐ.செவ்வரளி, 180; 200க்கு விற்ற நந்தியாவட்டம், 600; 300க்கு விற்ற சின்ன நந்தியாவட்டம், 1,000 ரூபாயாக விலை உயர்ந்தது.
இதுகுறித்து பூவியாபாரிகள் கூறுகையில், 'பனிப்பொழிவால் செடிகளில் பூக்கள் கருகி விடுகின்றன. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சரிந்துள்ளது. ஆனால் திருமண முகூர்த்த நாட்கள், கார்த்திகை பிறப்பு, சபரிமலை சீசனால், பூக்கள் தேவை அதிக-ரித்து விலை உயர்ந்துள்ளது' என்றனர்.
*தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படும் பூக்கள், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்ப-கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெங்களூரு, கேரளா, ஆந்-திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
நேற்று முன்தினம், கிலோ குண்டு மல்லி, 1,000 ரூபாய், சன்ன-மல்லி, 700, கனகாம்பரம், 1,200, ஜாதிமல்லி, 360, காக்கடான், 400, பன்னீர்ரோஸ், 100, பட்டன்ரோஸ், 100, சம்பங்கி 80 என விற்-பனையானது. நேற்று விலை உயர்ந்து, குண்டுமல்லி கிலோ, 1,400 ரூபாய், கனகாம்பரம், 1,400, சன்னமல்லி, 800, காக்கடான், 550, ஜாதிமல்லி, 450, சம்பங்கி, 120, பன்னீர்ரோஸ், 120, பட்-டன்ரோஸ், 120, சாமந்தி, 100, செண்டுமல்லி, 80 ரூபாய்க்கு விற்ப-னையானது.
*நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் பூக்கள் வரத்து முற்-றிலும் குறைந்துள்ளது. வெயில் காலத்தில், ஒரு ஏக்கருக்கு, 25 கிலோ பறிக்கப்பட்ட நிலையில், தற்போது அரை கிலோ கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், 15 நாட்களுக்கு முன், கிலோ குண்டுமல்லி, 200 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று கிலோ, 2,000 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்டது.

Advertisement