பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த சென்டிவாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டின் கீழ், அகிலி கிராமத்தில் முழு நேர ரேஷன் கடையில், 400க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

இக்கடைக்கு, அகிலி கிராம மாதா கோவில் பகுதியிலிருந்து, 2 கி.மீ., துாரம் சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். கடைக்கு சென்றுவர முதியோர் மற்றும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால், பகுதிநேர ரேஷன் கடை அமைக்கக்கோரி, கலெக்டர் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம், அப்பகுதியினர் மனு அளித்தனர்.

இதை தொடர்ந்து, அகிலி மாதா கோவில் தெருவில், பகுதிநேர ரேஷன் கடை அமைத்து, திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் செயல்பட, கூட்றவுச் சங்கங்களின் இணை பதிவாளருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

Advertisement