ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை சக்ஸஸ்; சரித்திர சாதனை என ராஜ்நாத் சிங் பாராட்டு

8

புதுடில்லி: நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஹைப்பர்சானிக் ஏவுகணையை இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ., அமைப்பு நேற்று ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இது சரித்திர சாதனை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, நெடுந்தொலைவு சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதித்து வருகிறது. நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணையின் விமான சோதனை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் தீவில் இருந்து நேற்று (நவ.,17) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படையின் மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் விமான சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது.

சரித்திர சாதனை





இது குறித்து, சமூகவலைதளத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஹைப்பர்சானிக் ஏவுகணையை இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ., அமைப்பு நேற்று ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.



நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பறக்கவிட்டு இந்தியா ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. சரித்திர சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு வரலாற்று தருணம். நமது ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறை அபார சாதனைக்காக, வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement