விபத்தில் இன்ஸ்பெக்டர் படுகாயம்

புதுக்கோட்டை : தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன், 46, குடும்பத்தினருடன் திருச்சியில் வசிக்கிறார். நேற்று திருச்சியில் இருந்து, திருச்சிற்றம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை போலீஸ்காரர் முருகன், 34, ஓட்டினார்.

வடகாடு அருகே அணவயல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஜீப் மீது, எதிரே புதுக்கோட்டையை நோக்கி வந்த 'பொலீரோ பிக்கப்' வேன் மோதியது. இதில், சேரன் படுகாயம் அடைந்தார். விபத்தில், இரு வாகனங்களும் சேதமடைந்தன.

சேரன், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொலீரோ வேன் டிரைவர் சோலைமுத்து, 44, என்பவர் மீது, வடகாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement