'பேஸ்புக்' பழக்கத்தால் ரூ.41 லட்சம் போச்சு!
ராணிப்பேட்டை : மயிலாடுதுறையை சேர்ந்தவர் மகாலட்சுமி, 45; எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், 2019ல் வேலையை விட்டு, தொழில் தொடங்க முடிவு செய்தார்.
அப்போது, 'பேஸ்புக்' வாயிலாக ராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர், ராணிப்பேட்டையில், புதிதாக தொழில் செய்ய இருப்பதாகவும், அதில், பங்குதாரராக சேர்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனவும் கூறினார்.
நம்பிய மகாலட்சுமி, 41.20 லட்சம் ரூபாயை, 'பேஸ்புக்' வாயிலாக பழக்கமானவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். மேலும், அவரை நேரில் சந்தித்து, தொழில் தொடர்பாக கேட்க முயன்றபோது, அவர் கொடுத்த முகவரியில் வசிக்கவில்லை என, தெரிந்தது.
ராணிப்பேட்டை எஸ்.பி., கிரண்ஸ்ருதியிடம், மகாலட்சுமி புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement