கொடைக்கானலில் கனமழை

கொடைக்கானல் : -கொடைக்கானலில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியதோடு பனி மூட்டமும் காணப்பட்டது. கொடைக்கானலில் சில வாரங்களாக வறண்ட வானிலை நீடித்து குளிர் நிலவியது.

நேற்று காலை நகரை பனிமூட்டம் சூழ விட்டுவிட்டு மழை பெய்தது. மதியத்திற்கு பின் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையையும் பொருட்படுத்தாமல் பனிமூட்டத்திற்கிடையே பயணிகள் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் இங்குள்ள சுற்றுலா தலங்களையும் ரசித்தனர். பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்க குளிரும் நிலவியது. மதியத்திற்கு பின் பெய்த கனமழையால் பயணிகள் விடுதிகளில் முடங்கினர்.

Advertisement