பிரபஞ்ச அழகியானார் டென்மார்க்கின் தேல்விக்

புதுடில்லி: ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக், 2024ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள மெக்சிகோ சிட்டி நகர அரங்கில், 2024ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக், 21; நடப்பு ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

இதன் வாயிலாக, பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற, முதல் டென்மார்க் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கடந்த 2023ல், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற நிகரகுவாவைச் சேர்ந்த அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ், விக்டோரியா கேர் தேல்விக்கிற்கு பிரபஞ்ச அழகி பட்டத்தை சூட்டினார்.

இந்த போட்டியில், நைஜீரியா அழகி சிதிம்மா அடெட்ஷினா இரண்டாவது இடத்தையும், மெக்சிகோ அழகி மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - 2024 பட்டம் வென்ற 20 வயதான ரியா சிங்கா, பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் 30 இடங்களை பிடித்தார்.

Advertisement