தேசிய நுாலக வார விழா நுாலகத்தில் கொண்டாட்டம்
நாமக்கல்: நாமக்கல் கோட்டை மாநகராட்சி உயர்நிலை பள்ளியில், 16 வய-துக்குட்பட்ட குழந்தைகளுக்கு, நுண்கலைகளை கற்றுக்கொ-டுக்கும் ஜவகர் சிறுவர் மன்றம் கலை பண்பாட்டுத்துறை மூலம் செயல்பட்டு வருகிறது.
இதில், குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில், தேசிய நுாலக வாரவிழா, மாவட்ட மைய நுாலகத்தில் கொண்டாடப்பட்டது. ஜவகர் சிறுவர் மன்ற இயக்குனர் தில்லை சிவக்குமார் தலைமை வகித்தார்.விழாவை முன்னிட்டு, குழந்தைகளுக்கு சிறுவர் புத்தகங்களை வழங்கி வாசிக்க வைத்து, நேரம் கிடைக்கும் போது நுால்களை படிக்கவும், நுாலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மைய நுாலக இரண்டாம் நிலை நுாலகர் நாகராஜ், 30 ரூபாய்- கட்டி உறுப்பினராக இணைந்தால் என்ன பயன்கள் என்பதை விளக்கினார். மைய நுாலக மூன்றாம் நிலை நுாலகர் கோகிலா, ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள் ராமச்சந்திரன், பாண்டிய-ராஜன், சரவணன், அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.