தொழில் வரி விதிக்க தறிக்கூடங்களில் அளவீடு நெசவாளர்கள் அதிர்ச்சி; அரசுக்கு கோரிக்கை

சேலம்: சூரத்தில் இருந்து ஜவுளி ரகங்கள் அதிகளவில் வருவதால், சேலம் மாவட்டத்தில், 5 லட்சம் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தொழில் வரி விதிக்க, தறிக்கூடங்களை அளவீடு செய்வது, நெசவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப-டுத்தியுள்ளது.


கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில், ஆலோசனை கூட்டம் சேலம், களரம்பட்டியில் நேற்று நடந்தது. அம்மாபேட்டை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், சேலம் மாவட்ட அண்ணா கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம் உள்பட ஐந்து சங்கத்தினர் பங்கேற்-றனர்.தொடர்ந்து சேலம் மாநகர் விசைத்தறி டுவிஸ்டிங், வைண்டிங், வார்ப்பிங் சிறுதொழில் முனைவோர் சங்க செயலர் பாலசுப்ரமணி கூறியதாவது:
சூரத்தில் இருந்து ஜவுளி ரகங்கள் அதிகளவில் தருவிக்கப்படு-வதால், உள்ளூர் உற்பத்தி, 60 சதவீதம் குறைந்து நெசவாளர்க-ளுக்கு மாதத்தில், 15 - 20 நாட்களாக வேலை வாய்ப்பு குறைந்து-விட்டது. இதனால் சேலம் மாநகரில், 2 லட்சம் உள்பட மாவட்டம் முழுதும், 5 லட்சம் நெசவாளர் பாதிக்கப்பட்டுள்-ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி பில் கலெக்டர்கள், தறி கூடங்களுக்கு சதுரடிக்கு, 27 ரூபாய் வீதம் தொழில் வரி விதிப்பதாக கூறி, தறிக்-கூடங்களை அளவீடு செய்து வருகின்றனர். மாதம், 6,000 - 7,000 ரூபாய் வரை, கூலி வாங்கும் நெசவாளர்களால் தொழில் வரி எப்படி செலுத்த முடியும்?
தொழில் முடக்கத்தால், வாரந்தோறும் வழங்கப்பட்ட கூலி, தற்-போது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. நுாறு தறி இயக்கப்படும் இடங்களில் தற்போது, 30 மட்டும் இயக்கப்ப-டுகின்றன. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்-பட்டுள்ளதால், தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். இது-தொடர்பாக சேலம் மாநகராட்சி கமிஷனர், சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இந்த விஷயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement