ஜவ்வாது பட்டி புதுார் ஜூம்மா பள்ளிவாசலில் முப்பெரும் விழா
ஒட்டன்சத்திரம் : ஜவ்வாதுபட்டிபுதுார் மஸ்ஜித் முபாரக் ஜூம்மா பள்ளிவாசல் சார்பில் மீலாது விழா, ரசூலுல்லா கந்துாரி விழா, பள்ளியில் 25 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றும் இமாம் பிலாலை கவுரவிக்கும் முப்பெரும் விழா நடந்தது.
மாவட்ட அரசு காஜி , ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் அல்ஹாக் முகமது அலி அன்வாரி ஹஜ்ரத் கிப்லா தலைமை வகித்தார்.
மதுரை மாவட்ட அரசு காஜி சபூர்முகைதீன், திண்டுக்கல் அல்பய்யா பெண்கள் மதரஸா முதல்வர் ஹாஜி முகமது ஹாரூன் தாவூதி பேசினர்.
இமாம் ஷேக்பரீத், மக்துாமீ, பிலால்கமால்பாட்ஷா ஆகியோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் அமானுல்லாஹ் அன்சாரி, பொருளாளர் ஹசன் ஷரிப் பைஜி உள்ளிட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள், மஸ்ஜித் முபாரக் ஜூம்மா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.