.இரண்டாவது நாளாக நடந்த வாக்காளர் சேர்க்கை முகாம்
ஈரோடு: தேர்தல் கமிஷன் உத்தரப்படி சிறப்பு சுருக்க திருத்தத்தின் ஒரு பகுதியாக, இரண்டாவது நாளாக நேற்றும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,222 ஓட்டு சாவடிகளிலும் முகாம் நடந்தது. வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி உள்ளிட்ட-வற்றில் மாற்றம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பான படிவங்களை வாக்காளர்கள் பெற்று சென்று பூர்த்தி செய்து வழங்கினர். நேற்று ஞாயிற்றுக்கி-ழமை என்பதால் காலையில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு கூட்டம் கணிசமாக காணப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement