ரயில்வே ஸ்டேஷனில் துாய்மைப்பணி
கோவை ; கோவை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தசிறப்பு துாய்மைப் பணியை முன்னிட்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுற்றுப்புற துாய்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,கோவை ரயில்வே ஸ்டேஷனில்சிறப்பு துாய்மைப்பணிநடந்தது. இதில் ரயில்வே ஊழியர்கள், தெற்கு ரயில்வே பாரத் ஸ்கவுட் தன்னார்வலர்கள், போத்தனுார் ரயில்வே மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
ரயில்வே கழக இணை இயக்குனர்(நிறுவுதல்) முரளிதரன் பேசுகையில்,''ரயில்வே ஸ்டேஷன் உட்பட சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது,'' என்றார்.
முன்னதாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
கோவை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம், 1 'ஏ' வில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், விழிப்புணர்வு பேரணி, ரயில்வே ஸ்டேஷனின் மற்றொரு பகுதியில் உள்ள மியாவாக்கி பூங்காவிலும் துாய்மைப் பணி மற்றும்மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் சச்சின் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.