தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தில் புகையான் நோயால் ஏக்கருக்கு ௧ டன் நெல் மகசூல் பாதிப்பு
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுக்கப்பட்டு, தடப்பள்ளி--அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரு பாசனங்களுக்கும் விவசா-யிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூலை 12 முதல், நவ.,8ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, முதல் போக நெல் சாகுப-டிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக இரு பாசனங்களிலும், நெல் அறுவடை நடக்கிறது. தொடர் மழையால் பல இடங்களில் அறுவடை பாதித்துள்ளது. அதேசமயம் புகையான் நோய் தாக்குதலால், ஏக்க-ருக்கு ஒரு டன் மகசூல் பாதித்துள்ளதாக, விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறியதாவது: தொடர் மழையால் நெற்பயிர்களில் ஏற்பட்ட புகையான் நோய் தாக்கு-தலால் நெல் மகசூல் பாதித்துள்ளது. நெல் நடவு முதல், அறு-வடை வரை வயல்கள் பக்கம் வேளாண்மை துறையினர் தலை காட்டுதில்லை. இதனால் நோய் தாக்குதல் தெரியாமலும், அதற்கு தீர்வு காணாத நிலையும் தொடர்கிறது. தற்போது மழையால் அறுவடையும் பாதித்துள்ளது.
குறிப்பாக கரட்டடிபாளையம், செங்கலரை, செய்யாம்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி, பங்களாப்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், பர-வலாக புகையான் நோய் தாக்குதல் உள்ளது. முன்பு ஏக்கருக்கு மூன்று டன் கிடைக்கும். தற்போது இரண்டு டன் மட்டுமே
கிடைத்துள்ளது.
இதனால் ஏக்கருக்கு, 24 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்-டுள்ளது. வேளாண் துறை முறையாக பருவகாலங்களில், நெல் விளைவிக்கும் விவசாயிகளுக்கு, தங்களின் களப்பணி மூலம் வழிகாட்டினால் இதுபோன்ற இழப்பை தடுக்க முடியும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினார்.